Vaa Padi Po (Tamil)

Overview

Publisher
Prowess Publishing
Released
July 17, 2025
ISBN
9781545761731
Format
ePub
Category
Poetry

Book Details

ஒவ்வொரு மனிதனுக்கும் யாரோ ஒருவர் பின்னாடி இருந்து தட்டிக் கொடுத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும்.
உலகில் பல்வேறு தத்துவ அறிஞர்களை கண்டு இருப்போம். அவர்கள் எல்லோரும் நாம் நன்றாக வாழவே சொல்லிக் கொடுத்திருப்பார்கள்.
இந்த "வா, படி, போ" நூலினை பொருத்தவரை குறிப்பாக இளைய தலைமுறை வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அத்தனை கருத்துகளையும் ஒருங்கே பெற்றுள்ளது. மேலும், சாதாரண மனிதனுக்கும் வாசிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும் என்ற உயரிய நோக்கில் எழுதப்பட்டது.

இதில் உள்ள ஒவ்வொரு வரிகளும் பல்வேறு அனுபவங்களின் முதிர்ச்சியாகவே காணப்படுகிறது. வாழ்க்கையில் ஒரு மனிதன் தோல்வியுற்றால் அவனால் என்ன செய்ய முடியும்? அவன் எழுதுவான், எழுதிக் கொண்டிருப்பான் அதைத்தான் இந்த நூல் பேசுகிறது. வாழ்க்கையில் விழுந்துவிட்ட ஒரு மனிதன் தான் விழுந்தது விழுந்ததாகவே இருக்கட்டும். மற்ற எல்லோரும் ஜெயிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

இந்த நூலினை நீங்கள் வாசிக்கும் தருணம் உங்களுக்கும் இந்த வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும்.நீங்கள் நூலினுடைய வரிகளை வாசிக்கும் போது அந்த நூலின் சாராம்சங்களை தெரிந்து கொள்வது அவசியம். இந்த நூலிற்கு "வா, படி, போ" இப்படி பெயர் வைத்தது இந்த நாட்டில் இருக்கின்ற எண்ணற்ற இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என்பதற்காக மட்டும். அதனால்தான் இளைஞர்கள் எல்லோரும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு சாதாரண மனிதனான என்னுடைய கருத்துகளாக பதியப்பட்டுள்ளது. இந்த நூலில் ஆரம்பம் முதல் இறுதி வரை வெற்றி பெற வேண்டும், நூல்களை வாசிக்க வேண்டும் என்ற இரண்டு சிந்தனை மட்டும்தான் ஆங்காங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாய் நூல்கள் முழுவதும் இருக்கின்றது. எனவே, இந்த நூலை வாசித்து நீங்களும் வெற்றியாளர்களில் ஒருவராக திகழ என்னுடைய வாழ்த்துக்கள்.

Author Description

முனைவர் ப. மணிகண்டன் எனும் இவர் அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் எனும் சிற்றூரில் பழனிமுத்து பாப்பு அவர்களுக்கு மகனாக பிறந்திருக்கிறார். தமிழில் இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரை படித்திருக்கிறார். 20க்கும் மேற்பட்ட விருதுகளையும் மற்றும் ஆறிற்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதி இருக்கிறார்.

முதலில் கல்லூரியிலும் பிறகு பல்கலைக்கழகத்திலும் பணியில் இருக்கிறார். பல்வேறு பட்டிமன்றங்களையும் பல்வேறு கவியரங்கங்களையும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். பல்வேறு கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக சென்று சிறப்பு சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார். பல்வேறு தமிழ் அமைப்புகளோடு கரம் கோர்த்து தொடர்ந்து தமிழுக்காகத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறார்.

Read this book in our EasyReadz App for Mobile or Tablet devices

To read this book on Windows or Mac based desktops or laptops:

Recently viewed Books

Help make us better

We’re always looking for ways to improve. If you’ve got feedback or suggestions about how we can do better, we’d love to hear from you.

Note: If you’re looking to solve a problem with your URMS eReader, app, or purchase, visit our Help page, or submit a help request.

What is the purpose of your visit?
Did you accomplish your goal?
Yes No
Where can we improve?
Your comments*