Have questions and need help?
support@ebooks2go.com

கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் உணவுகள்: இதய நோய்க்கு வழிவகுக்கும் ஒரு முக்கிய காரணம்

Overview

Publisher
Tektime
Released
July 10, 2024
ISBN
9788835464471
Format
ePub
Category
Health & Fitness

Book Details

இன்றைய காலகட்டத்தில் அதிகம் பேசப்படும் வார்த்தைகளில் ஒன்று கொலஸ்ட்ரால், ஏனெனில் கொலஸ்ட்ரால் வாழ்விற்கும் உயிர் இழப்பிற்கும் இடையில் நிற்கிறது. இருப்பினும், அதைப்பற்றிப் பல கூற்றுக்கள் பிரபலமாக இருக்கின்றன. உணவுப் பழக்கம் என்று வரும்போது, எதைச் சாப்பிடுவது, எதைத் தவிர்ப்பது என நாம் முடிவெடுக்க மிகவும் சிரமப்படுகிறோம். அடிப்படையில் கொலஸ்ட்ரால் என்பது, நமது உடலில் மற்றும் சில வகையான உணவுப்பொருட்களில் காணப்படும் மெழுகு போன்ற கொழுப்பு. இது உயிர் அணு சவ்வுகளின் உருவாக்கம், ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் D உற்பத்தி போன்ற உடலியல் செயல்முறைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிரதானமாகக் குறை-அடர்த்தி லிப்போ புரதங்கள் (LDL) மற்றும் உயர்-அடர்த்தி லிப்போ புரதங்கள் (HDL) ஆகிய இரண்டு வகை கொழுப்புப் புரதங்களால், கொலஸ்ட்ரால் இரத்த ஓட்டத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது.கொலஸ்ட்ரால் நமது உடலுக்கு அத்தியாவசியமானது என்றபோதிலும், மிகை அளவு LDL கொலஸ்ட்ரால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்களுக்கு வழிவகுக்கும். நிறைவுற்றகொழுப்பு மற்றும் ட்ரான்ஸ் கொழுப்பு நிறைந்த உணவை உண்பது, உடற்பயிற்சியின்மை மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் போன்ற வாழ்க்கை முறைகள், கொலஸ்ட்ரால் அளவை ஆரோக்கியம் பாதிக்கும் அளவிற்கு அதிகரிக்கும்.பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் இலைப் புரதங்கள் போன்ற இதயத்திற்கு ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுவதன் மூலம், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம். தெவிட்டிய கொழுப்பு மற்றும் ட்ரான்ஸ் கொழுப்பு அதிகம் இருக்கும் எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட அல்லது வறுக்கப்பட்ட உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவது போன்ற செயல்கள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும். தேவைப்பட்டால், இதய நோய்ப் பாதிப்புகளைத் தவிர்த்து, ஒட்டுமொத்த உடல் நலத்திற்காக மருத்துவர்கள் / உடல் நல வல்லுநர்கள், வாழ்க்கை முறை மாற்றங்களுடன், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள்.கொலஸ்ட்ரால் அளவை அடிக்கடி பரிசோதிப்பது, அளவு அதிகரிப்பதை ஆரம்பக்கட்டத்தில் கண்டுபிடிக்கவும் அதைச் சிறந்த முறையில் கட்டுப்படுத்தவும் உதவும். நான் ஒரு மருத்துவர் / உடல் நல வல்லுநர் அல்ல, இருப்பினும் இந்தத் தலைப்பைப்பற்றி நிறையப் படித்து, ஆராய்ந்து அதன் பிறகு தான் இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறேன். இந்தத் தலைப்பைப்பற்றி நீங்கள் ஆழமாகச் சிந்திக்கவும் மருத்துவ ஆலோசனை தேவையா எனப் புரிந்துகொள்ளவும் இந்த புத்தகம் உதவும்.

Author Description

அமேசான் தளத்தில் அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களின் நூலாசிரியர்களில் ஒருவர் ஓவன் ஜோன்ஸ், இவர் வேல்ஸ் நாட்டின் பாரி நகரத்தைச் சேர்ந்தவர், இவர் பல நாடுகளில் வசித்திருக்கிறார் மேலும் பல நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். 1970 -களில் சோவியத் ஒன்றியத்தில் ரஷ்ய மொழியைக் கற்றுக்கொள்ளும்போது, அவர் உளவாளிகளுடன் தொடர்ந்து பழகினார். பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்குப் பிறகு, சுரினாம் நாட்டில், 1982 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் அவருக்குத் தொடர்பிருக்கிறது மற்றும் அவர் கூலிப்படையைச் சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டார். பின்னர், ஒரு நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்தபோது, பாலைவனப் புயல் ஏற்பட்டபோது பாரி நகரிலிருந்து ஜிப்ரால்டருக்கு நான்கு பேர் பயணம் செய்த குழுவில் துடுப்பு வளிக்கும் அடிமையாகப் பயணம் செய்தார் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் படகில் அவர்கள் பயணம் செய்தார்கள். அந்தப் பயணத்தின் போது, அவர்கள் பயணித்த படகு ஏறக்குறைய ஒரு ரஷ்ய எண்ணெய் டேங்கர் மற்றும் ஒரு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் – "தி அட்லாண்டிக் சேலஞ்சர்" ஆகியவற்றில் மோதியது. 2004 ஆம் அண்டு முதல், அவர் பெரும்பாலும் இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் தாய்லாந்து நாட்டில் வசித்தார். அவர் இப்போது தனது மனைவியுடன் அவரது ஆள் அரவமற்ற வடக்கு பகுதியில் இருக்கும் விவசாய கிராமத்தில் அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார் மேலும் கதை எழுதுவது மற்றும் அவர் எழுதிய கதைகளை அதிகளவில் மொழிபெயர்ப்பு செய்வது போன்ற பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

Read this book in our EasyReadz App for Mobile or Tablet devices

To read this book on Windows or Mac based desktops or laptops:

Recently viewed Books

Help make us better

We’re always looking for ways to improve. If you’ve got feedback or suggestions about how we can do better, we’d love to hear from you.

Note: If you’re looking to solve a problem with your URMS eReader, app, or purchase, visit our Help page, or submit a help request.

What is the purpose of your visit?
Did you accomplish your goal?
Yes No
Where can we improve?
Your comments*