நேர மேலாண்மை மற்றும் ஆக்கத்திறன்: வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவுகளைத் திறம்பட்ட தகவல் பரிமாற்றம் மூலம் வளர்க்கும் உத்திகள்

Overview

Publisher
Tektime
Released
January 23, 2024
ISBN
9788835459729
Format
ePub

Book Details

"உறவுகளும் தகவல் பரிமாற்றத் திறமைகளும்" என்ற இந்த நூல், வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவுகளை வளர்க்க உதவும் கருவிகள் மற்றும் நுட்பங்களை அறிந்துகொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தகவல் பரிமாற்றத்தின் அடிப்படைகள், கலாச்சார வேறுபாடுகள் மற்றும் கருத்து முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பது போன்றவற்றைப் புரிந்துகொள்ள, இந்த நூல் நடைமுறை பயிற்சி அறிவுறுத்தல்களை வழங்குகிறது. நீங்கள் சிறந்த வகையில் தகவல்களைப் பரிமாற்றம் செய்து வலுவான மற்றும் நிறைவான உறவுகளை வளர்க்க நிகழ் உலக உதாரணங்களையும் வழங்குகிறது. இந்த நூல் முழுவதிலும், தகவல் பரிமாற்றத் திறன்களை எப்படிவளர்த்துக்கொள்வது, உணர்ச்சிகளை எப்படி அறிந்து அவற்றைச் சமாளிப்பது, பரிவு மற்றும் கவனமாகக் கேட்கும் திறனை வளர்ப்பது மற்றும் உறுதியுடன் தகவல் பரிமாற்றம் செய்யும் வழிமுறைகளை உருவாக்குவது போன்றவற்றைக் கற்றுக்கொள்வீர்கள். கருத்து முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பது, நம்பிக்கையைவளர்ப்பது, உறவுகளின் நெருக்கத்தை அதிகரிப்பது மற்றும் திறம்பட்ட தகவல் பரிமாற்றத்தின் மூலம் உறவுகளை வளர்ப்பது போன்றவற்றையும் தெரிந்துகொள்வீர்கள். காதல் உறவு, நட்பு, தொழில்ரீதியான உறவு, இவற்றில் எந்த வகையான உறவாக இருந்தாலும், அதற்குத் தேவையான கருத்துகளை இந்த நூல் வழங்கும். வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய உலக சூழலில், வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவுகளை வளர்க்க விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் "உறவுகளும் தகவல் பரிமாற்றத் திறமைகளும்".

Author Description

அமேசான் தளத்தில் அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களின் நூலாசிரியர்களில் ஒருவர் ஓவன் ஜோன்ஸ், இவர் வேல்ஸ் நாட்டின் பாரி நகரத்தைச் சேர்ந்தவர், இவர் பல நாடுகளில் வசித்திருக்கிறார் மேலும் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். ௧௯ 70 ஆம் ஆண்டுகளில் சோவியத் ஒன்றியத்தில் ரஷ்ய மொழியைக் கற்றுக்கொள்ளும்போது, அவர் உளவாளிகளுடன் தொடர்ந்து பழகினார். பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்குப் பிறகு, சுரினாம் நாட்டில், 1982 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் அவருக்குத் தொடர்பிருக்கிறது மற்றும் அவர் கூலிப்படையை சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டார். பின்னர், ஒரு நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்தபோது, பாலைவனப் புயல் ஏற்பட்டபோது பாரி நகரிலிருந்து ஜிப்ரால்டருக்கு நான்கு பேர் பயணம் செய்த குழுவில் துடுப்பு வளிக்கும் அடிமையாக பயணம் செய்தார் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் படகில் அவர்கள் பயணம் செய்தார்கள். அந்தப் பயணத்தின் போது, அவர்கள் பயணித்த படகு ஏறக்குறைய ஒரு ரஷ்ய எண்ணெய் டேங்கர் மற்றும் ஒரு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் - தி அட்லாண்டிக் சேலஞ்சர் ஆகியவற்றில் மோதியது. 2004 ஆம் அண்டு முதல், அவர் பெரும்பாலும் இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் தாய்லாந்து நாட்டில் வசித்தார். அவர் இப்போது தனது மனைவியுடன் அவரது ஆள் அரவமற்ற வடக்கு பகுதியில் இருக்கும் விவசாய கிராமத்தில் அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார் மேலும் கதை எழுதுவது மற்றும் அவர் எழுதிய கதைகளை அதிகளவில் மொழிபெயர்ப்பு செய்வது போன்ற பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

Read this book in our EasyReadz App for Mobile or Tablet devices

To read this book on Windows or Mac based desktops or laptops:

Recently viewed Books

Help make us better

We’re always looking for ways to improve. If you’ve got feedback or suggestions about how we can do better, we’d love to hear from you.

Note: If you’re looking to solve a problem with your URMS eReader, app, or purchase, visit our Help page, or submit a help request.

What is the purpose of your visit?
Did you accomplish your goal?
Yes No
Where can we improve?
Your comments*