Have questions and need help?
support@ebooks2go.com

நயன் தாராவின் கர்மா

Overview

Publisher
Prowess Publishing
Released
March 16, 2025
ISBN
9781545760987
Format
ePub
Category
Horror

Book Details

நாம் செய்த கர்ம வினை நம்மை தண்டிக்காமல் விடாது என்பதை உணர்த்துவதே இந்த கதையின் அடி நாதம்.

Author Description

சென்னையை பூர்விகமாகக் கொண்ட நான் ஒரு இயற்கையின் நேசன், கலைகளின் காதலன், கனாக்களில் வாழ்பவன். அதே நேரம் சமூக பிரக்ஞையும் உடையவன். சிறு வயதிலிருந்தே திரைத்துறையால் வெகுவாக ஈர்க்கப் பட்டிருந்தேன். இதற்கு என் தந்தை இர. உதயணனும் ஒரு வகையில் காரணம். அவர் ஒரு பெரிய எம்.ஜி.ஆர் ரசிகர், அவர் பெயரைச் சுவாசமாகக் கொண்டவர். அதனால் திரைத்துறையை அவர் வாழ்வின் அங்கமாக்கிக் கொண்டார். அதன் தாக்கமோ என்னவோ நானும் திரைத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தேன்.

பள்ளிப் படிப்பு முடிந்த பின்னர் குடும்பத்தினர் வற்புறுத்தலால் பொறியியல் பட்டதாரியானேன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் மரபணுக்களில் எங்கோ ஒரு மூலையில் அவர்கள் அறியாமலே ஒரு கலைத் தன்மை ஒளிந்திருக்கும். அதேபோல் எனக்கும் என்னைத் தூங்க விடாமல் ஏதோ ஒன்று என்னை உறுத்திக்கொண்டிருந்தது.

இது இப்படியே இருக்க இளமைப் பருவம் அதன் வேலையைக் காட்ட, காதல் என்னும் சுரப்பிகளின் வலையில் விழுந்தேன். அதில் வெற்றியும் பெற்றேன். ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு குடும்பத்தையும் நடத்திவந்தேன். இறுதியில் இரு ஆண் சிங்கங்களுக்குத் தந்தையும் ஆனேன்.

வாழ்க்கை அதன் போக்கில் பயணிக்க அந்த கலை தாகம் மட்டும் என்னை உறுத்திக் கொண்டேயிருந்தது. சரி நம் கதைகளைத் திரையில் பார்க்க முடியாவிட்டால் என்ன நம் அறிவார்ந்த வாசகர்களின் மனத் திரையில் பிரதிபலிக்க செய்யப் புத்தக வடிவில் வெளியிடலாமென்று முடிவெடுத்தேன். இப்பொழுது கனவை நினைவாக்கிவிட்டேன். என் எழுத்துக்களில் பிறக்கும் கதைகள் வெறும் கதைகள் மட்டுமல்ல அவை என் குழந்தைகள். என் எழுத்தில் பிறந்த இந்த முதல் குழந்தையை இந்த உலகிற்குக் கொண்டு வந்துள்ளேன். வாசகர்களாகிய உங்களுக்குப் பிடிக்குமென்ற நம்பிக்கையுடன்.

நானும் ஒரு கதாசிரியராக வேண்டுமென்ற எண்ணத்திற்கு வித்திட்டவர் என் மானசிக குருவான "கார்த்திக் சுப்புராஜ்". 2014ஆம் ஆண்டு வெளியான "ஜிகர்தண்டா" படத்தைப் பார்த்த பின்பு தான் எனக்குள் இருந்த கதாசிரியன் எரிமலை போல் வெடித்து வெளியே வந்தான். அதனால் நான் எழுதப் போகும் எல்லா கதைகளையும் அவருக்குச் சமர்ப்பிக்கிறேன்.

Read this book in our EasyReadz App for Mobile or Tablet devices

To read this book on Windows or Mac based desktops or laptops:

Recently viewed Books

Help make us better

We’re always looking for ways to improve. If you’ve got feedback or suggestions about how we can do better, we’d love to hear from you.

Note: If you’re looking to solve a problem with your URMS eReader, app, or purchase, visit our Help page, or submit a help request.

What is the purpose of your visit?
Did you accomplish your goal?
Yes No
Where can we improve?
Your comments*